செய்திகள்

மெழுகுச் சிலை ஆகிப்போன கத்ரீனா கைப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைபின் மெழுகுச் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்நிலையில் பாலிவுட் நடிகைககளில் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய மூவரில் யாருக்கு மெழுகுச் சிலை வைக்கலாம் என்று மேடம் டுசாட்ஸ் இணையதளம் மூலம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் கத்ரீனா கைபுக்கு சிலை வைக்கவே பலரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.