செய்திகள்

மெஸ்சி குடும்பத்தினர் மீது தாக்குதல்

தென் அமெரிக்க கண்டத்தின் கால்பந்து ஜாம்பவான் யார் என்பதை நிர்ணயிக்கும் கோபா அமெரிக்கா போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதி ஆட்டத்தை காண மெஸ்சியின் குடும்பத்தினர் சாண்டியாகோ மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது முதல் பாதிக்கு சற்று முன்பாக சிலி நாட்டு ரசிகர்கள் மெஸ்சியின் குடும்பத்தினரை வம்புக்கு இழுத்தனர். கடும் வாக்குவாதம் செய்த ஒரு ரசிகர் மெஸ்சியின் சகோதரர் ரோட்ரிகோவை திடீரென அடித்து விட்டார். பிறகு அவர்களை போலீசார் பாதுகாப்பான இடத்தில் அமர வைத்தனர். இதே போல் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகுரோவின் குடும்பத்தினரையும், ரசிகர்கள் கண்டபடி திட்டி தொந்தரவு செய்தனர்.