செய்திகள்

மேலும் பலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிக்கு வருவர் : டிலான் தெரிவிப்பு

மேலும் சில ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக  பாராளமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளர்.
அரசாங்கத்திலிருந்து தான் உட்பட நால்வர்  விலகிய பின்னர் எதிரக்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எம்மால் திருப்தியடைய முடியாது. நாம் 19வது திருத்தம் மற்றும் 20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையிலேயே அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டோம். இந்நிலையில் தொடர்ந்தும் எங்களால் அரசாங்கத்தில் இருக்க முடியாது அதனால் அதிலிருந்து வெளியேறியுள்ளோம். இதேவேளை மேலும் சிலர் எம்மைப் போன்று வெளியேறி எதிர்க்கட்சி பக்கம் வரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.