செய்திகள்

மேலும் பல இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல மற்றும் தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று பிற்பகல் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. -(3)