செய்திகள்

நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு

நாளை  நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம்அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை தற்பொழுது மேல்மாகாணத்தில் சில இடங்களில் காணப்படும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 02ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு பின்னரும் நடைமுறையில் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.(15)