செய்திகள்

மேல் மாகாணத்திற்கு வெளியே தடுப்பூசி செலுத்தும் மாவட்டங்கள்

தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெளி மாகாணங்களிலும் முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார மருத்துவ பிரிவுகளில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)