செய்திகள்

மே தினத்தில் பலத்தை காட்ட தயாராகும் கட்சிகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மேதினக் கொண்டாட்டம் இம்முறை ஹைட்பார்க் மைதானத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட் டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த மேதினக் கொண்டாட்டம் நடைபெறவிருக்கின்றது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதலாவது மேதினக் கொண்டாட்டம் இதுவாகும்.

மேற்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தின ஊர்வலம் தாமரைத் தடாகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகிறார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பு தேசிய தொழிற் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள மேதின ஊர்வலமும் இடம்பெறுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் பீ.ஆர்.ஸி.மைதானத்தில் நடைபெறுகின்றது. இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த திரு. தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கிருலப்பனையில் நடைபெறும் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேற்படி கட்சியின் மேதின ஊர்வலம் தெஹிவளை எஸ்.டீ.எஸ்.ஜயசிங்க வித்தியாலய விளையாட் டரங்கிற்கு அருகே நடைபெறுகின்றது.

இது போக 12 மேதினக் கூட்டங்கள் கொழும் பிலும் ஏனையவை நுவரெலியா, கண்டி, களுத்துறை ஆகிய இடங்களிலும் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றன.