செய்திகள்

மே 19ம் திகதி யுத்த வெற்றி தினமாக கொண்டாடப்படாது பிரிவனையை தோற்கடித்த தினமாகவே கொண்டாடப்படும் : அரசாங்கம்

யுத்தத்தால் ஒரு பிரிவு மக்கள் உயிரிழந்திருக்கையில் அதனை யுத்த வெற்றியாக கொண்டாட அரசாங்கம் தயாராக இல்லையெனவும் இதன்படி எதிர்வரும் 19ம் திகதி யுத்த வெற்றி தினமாக இன்றி பிரிவனையை தோற்கடித்த தினமாக கொண்டாடவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி 19ம் திகதி இந்த நிகழ்வு  மாத்தறை நகரில் நடத்தப்படுமெனவும்  இதன்போது இராணுவத்தினர் உட்பட யுத்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவு கூறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.