செய்திகள்

மைத்திரிக்கு எதிரான கம்பஹா மாவட்ட பிரதிநிதிகளின் தீர்மானம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது : யாப்பா

கம்பஹா மாவட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள்  பிரதிநிதிகள் மாநாட்டில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சி தலைமை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென  மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் அவரது  இல்லத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அனுர பிரியதர்சன யாப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த மாநாட்டில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுவது தொடர்பாக தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை  இது தொடர்பிலான செய்திகள் தகவல்கள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்வாறான ஓர் தீர்மானம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.