செய்திகள்

மைத்திரியின் ஆட்சியில் நாட்டின் ஓற்றையாட்சி முறைக்கு ஆபத்துவராது

நாட்டின் ஓற்றையாட்சி முறைக்கும் இறைமைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஆபத்து ஏற்படாது என ஜாதிஹ ஹெல உறுமய இன்று பௌத்த மகாநாயக்கர்களுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பெட்டுவாவே சுமங்கல தேரரை இன்று சந்தித்தவேளை ஜாதிஹ ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்கவும் இந்த உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.
ஜாதிஹ ஹெல உறுமயவின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபாலசிறிசேன நாட்டின் பாதுகாப்புஇறைமை மற்றும் ஒற்றயாட்சி முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார் என இவர்கள் இந்த சந்திப்பின்போது உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க முன்னாள் விடுதலைப்புலி தலைவர்களுக்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.