செய்திகள்

மைத்திரியின் கூட்டத்தில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்திருந்தது தண்ணீர் போத்தலாம்: நாமல் கூறுகின்றார்

தனது பாதுகாப்பு உத்தியேகத்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்தில் தண்ணீர் போத்தலையே கொண்டு சென்றுள்ளதகவும் தனது பாதுகாப்பு பிரிவினர் ஒரு போதும் ஜனாதிபதியின் கூட்டங்களில் துப்பாக்கியை கொண்டு செல்வதில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தென் மாகணத்தின் அக்குனுபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன சென்றதாக தெரிவித்து நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தி;ற்கு சென்ற தனது பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமையை ஊடகங்களினுடாகவே அறிந்தேன். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்தரையாடிய போது அவர் இது பெரிய விடயம் இல்லையென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனது தந்தை ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்து ஜனாதிபதியின் கூட்டங்களுக்கு துப்பாக்கியுடன் செல்வதில்லை. இந்நிலையில் குறித்த சம்பவத்தின் போது அந்த நபர் தண்ணீர் போத்தலையே வைத்திருந்ததாக தெரிய வருகின்றது. என நாமல் தெரிவித்துள்ளார்.