செய்திகள்

மைத்திரி-மகிந்த கூட்டணிக்குள் பிளவு?

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை கட்சி தொடர்பாக முடிவெடுக்க விஷேட கூட்டமொன்றை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்திருக்கையில் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அபேராமையில் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்நிலையானது மைத்திரி மகிந்த ஆகியோரை சார்ந்து நிற்கும் அரசியல்வாதிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னால் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த மைத்திரி சந்திப்பை எதிர்காலத்தில் உருக்குலைக்கும் சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.