செய்திகள்

மைத்திரி , மஹிந்த சந்திப்பு முயற்சி தோல்வியில்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்க செய்யும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளன.
நாளைய தினம் இருவருக்குமிடையிலான சந்திப்பை நடத்த ஜனாதிபதி மைத்திரி இணங்கிய போதும் தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு இப்போதைக்க சந்திப்பை நடத்த முடியாதென மஹிந்த தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா கட்சிக்குள் நிலவும் குழப்ப நிலைமையை தீர்க்கும் வகையில் இருவரையும் இணைந்து செயற்படச் செய்யும் முயற்சியில் கட்சியினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.