செய்திகள்

மைத்திரி, மஹிந்த, ரணில் அணியினரின் அதிகார போராட்;டங்கள் 19க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது: அனுரகுமார

மைத்திரி , மஹிந்த , ரணில் அணியினர் தங்கள் தங்களின் பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் 19வது திருத்தத்தை பயன்படுத்த முயற்சித்தமையினால் புதிய திருத்ததை சிறந்ததாக அமைக்க முடியாது போயுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களிலிருந்து அடுத்த பிரதமர் வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டது. இவ்வேளையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியும் மஹிந்த அணியும் தங்களின் பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டன. இதற்காக 19 திருத்தத்தை பயன்படுத்த முயற்சித்தனர்.
இதன்படி மைத்திரி அணியினர் ஜனாதிபதியின் முழு அதிகாரங்களையும் குறைக்காது மஹிந்தவை தோற்கடிக்க முயற்சித்தனர்,
இதன்போது மஹிந்த அணியினர் எந்த திருத்தத்தையும் நிறைவேற்ற விடாது குழப்ப முயற்சித்தனர். இதனால் 19வது திருத்தத்தை இதனை விடவும் செயற்திரன் மிக்கதாக அமைக்க முடியுhது போயுள்ளது. மைத்திரி , மஹிந்த , ரணில் அணியின் செயற்பாடுகள் 19க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.