செய்திகள்

மொராக்கோ போர் விமானத்தை காணவில்லை

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ள சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மொராக்கோவிற்கு சொந்தமான எவ்-16 ரக யுத்த விமானம் காணமற்போயுள்ளது.
சவுதிஅரேபியா தலைமையில் இடம்பெற்றுள்ள ஏழு அராபிய நாடுகளில் ஓன்று மொராக்கோ என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது போர் விமானங்களை நிறுத்திவைத்துள்ளது.
யேமனில் சட்டபூர்வ தன்மையை நிலை நாட்டுவதற்கு சவுதிதலைமையிலான கூட்டணியினால் பயன்படுத்தப்பட்ட எவ்-16 ரக விமானம் ஞாயிற்றுக்கிழமை காணமற்போயுள்ளது என மொராக்கோ அறிவித்துள்ளது.
அதேவேளை தங்களது விமானஎதிர்ப்பு துப்பாக்கிகள் யுத்த விமானமொன்றை வீழ்த்தியுள்ளதாக ஹெளத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்