செய்திகள்

மோசமான நிகழ்ச்சி நிரலுடன் ரணில் அரசாங்கம் வந்திருக்கின்றது: சிறிதரன் குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை விட ரணில் விக்ரமசிங்க மிக மோசமான நிகழ்ச்சி நிரலோடு தமிழ் மக்களை சிதறடிக்க முயற்சிக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில், சன சமூக நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டார்.

அத்துடன், இந்நிகழ்விற்குப் பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும், மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தை விட தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தமிழ் இனத்தை சிதறடிக்க செய்வதற்கான காரியங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.