செய்திகள்

மோடி அரசு ஏழைகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

“பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளை புறக்கணிக்கிறார் என்றும் பணக்கார்களின் நலனையை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்” என்று ம் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

1934-ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முதலாக சமூக – பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இது தொடர்பான விபரங்களை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

இதில் கிராமப்புற மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக உள்ளனர் என்றும் உடல் உழைப்பு சார்ந்த, நிரந்தமற்ற பணிகள் மூலம் கிடைக்கும் வருவாயே இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது என்றும் தெரியவந்தது.

இந்த புள்ளிவிபரங்கள் தொடர்பில் காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் கவுடா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குஜராத்தை மாதிரியாகக் கொண்டு ஆட்சி நடத்தும் நரேந்திர மோடியின் அணுகுமுறை ஏழைகளுக்கு எதிரானது என்பதை யுனிசெப் புள்ளி விவரம் காட்டுகிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களை மத்திய அரசு மறைக்கிறது.

நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட 2011-ம் ஆண்டின் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுக்கப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் ஊரகப் பகுதியில் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் என்பதேயே இது காட்டுகிறது.

பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என ஊரகப் பகுதியின் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி பெரும் முயற்சி எடுத்துக்கொண்டது.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மக்களவையில் மோடி கிண்டல் செய்தார். காங்கிரஸ் அரசு கண்ட தோல்விகளின் அடையாளச் சின்னம் என்று அவர் கூறினார். கிராமப்புற ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்த இந்த முன்னோடி திட்டத்தை மோடி அவமதித்தார்.

இதன் பிறகு இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை குறைக்கவும் முயற்சி செய்தது.

மத்தியில் அமைந்துள்ள இந்த சூட் பூட் சர்க்கார் பணக்கார்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனையே குறிக்கோளாக கொண்டுள்ளது. உதவியை எதிர்நோக்கியுள்ள இந்திய மக்களை கவனத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு ராஜீவ் கவுடா கூறினார்.