செய்திகள்

மோடி யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 28 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதலாவது பிரதமர் என்ற பெருமை மோடிக்கு உரித்தாகிறது.