செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் சட்டம் இன்று முதல் கடுமையாகின்றது

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான சட்டத்தை இன்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் போது தலைக் கவசத்துக்கான பட்டிகளை இருக்கமாக அணியாமை, பல்வேறு வர்ணங்களுடன் கூடிய வைபர்களை பயன்படுத்தல், அதிக  வேகத்தில் பயணித்தல் , அபாத்தான வகையில் பயணித்தல் , வாகணங்களை முந்தும் போது சட்டங்களை பின்பற்றாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சட்டத்தை கடுமைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவற்றில் உடனடியாக தண்டப் பத்திரம் விநியோகிக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் நேரடியாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் குற்றச்சாட்டுகள் என்பன காணப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் அதிகமாக மோட்டார் சைக்கிள்களினாலே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்தும்  வகையிலேயே அது தொடர்பான சட்டத்தை கடுமைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.