செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை

எதிர்வரும் புதன்கிழமை முதல் வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீதிகளில் இடம்பெறும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வீதிகளில் இடம்பெறும் விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்காளால் இடம்பெறுபவையே.இதன்படிகடந்த ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆகும். இந்நிலையில் இவற்றை கருத்திற் கொண்டு மோட்டார் சைக்கிள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.