செய்திகள்

யானை சின்னத்தில் களமிறங்கும் மலையக மக்கள் முன்னணி: இராதாகிருஷ்னன் அறிவிப்பு

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மலை­யக மக்கள் முன்­னணி ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானை சின்­னத்தில் போட்­டி­யிடும். இதனை மத்­திய குழு தீர்­மா­னித்­துள்­ளது.முன்­ன­ணியின் சார்பில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தன்­னையும், பது­ளையில் அர­விந்­த­கு­மா­ரையும் போட்­டி­யிட மத்­திய குழு பரிந்­து­ரைத்­துள்­ளது என்று முன்­ன­ணியின் அர­சி­யல்­துறை தலைவர் வே. இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

அட்­டனில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

செய்­தி­யாளர் மாநாட்டில் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாய­கமும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் செய­லா­ள­ரு­மான ஏ.லோறன்ஸ், கட்­சியின் உப­த­லைவர் விஜ­ய­சந்­திரன், நிதி செய­லாளர் அ.அர­விந்­த­குமார், அம்­ப­க­முவ பிர­தேச சபை முன்னாள் உறுப்­பினர் பிரசாத் உட்­பட பல முக்­கி­யஸ்­தர்­களும் கலந்துகொண்­டனர். இரா­தா­கி­ருஷ்ணன் தொடர்ந்து தெரி­விக்­கையில்..

கடந்த காலங்­களில் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவி சாந்தி சந்­தி­ர­சே­க­ருடன் சில கருத்து வேறு­பா­டுகள் காணப்­ப­டாலும் இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் முழு பங்­க­ளிப்­பினை அவர் வழங்­கு­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் எதிர்­கா­லத்தில் கட்­சி­யுடன் இணைந்து வலுப்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் மலை­யக மக்கள் முன்­னணி ஜக்­கிய தேசிய கட்­சியில் யானை சின்­னத்தில் போட்­டி­யிடும். இதனை மத்­திய குழு தீர்­மா­னித்­துள்­ளது. முன்­ன­ணியின் சார்பில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தன்­னையும், பது­ளையில் அர­விந்­த­கு­மா­ரையும் போட்­டி­யிட மத்­திய குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

அத்­தோடு வடக்கு கிழக்கில் உள்ள மலை­ய­கத்தை சார்ந்த இரண்டு பேரை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் இணைத்து இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­தலில் யாழ்ப்­பாணம் மாவட்­டத்­திலும் வன்னி மாவட்­டத்­திலும் போட்­டி­யி­ட­வைக்க தமிழ் முற்­போக்கு கூட்­டணி தீர்­மானம் எடுத்­துள்­ளது. அது தொடர்­பான பேச்­சு­வா­ரத்தை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் நடை­பெற்று வரு­கி­றது. வடக்கு, கிழக்கில் இருக்­கின்ற மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்­காக அவர்­களின் வேண்­டு­கோள்க்­கி­ணங்­கவே இந்த தீர்­மானம் எடுத்­துள்ளோம்.

100 நாள் வேலைத்­திட்­டத்தில் மலை­யக பகு­தியில் உதவி ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். அத்­தோடு இயற்கை அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தோட்ட உட்­கட்­மைப்பு அமைச்­சினால் வீட­மைப்பு திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. எதிர்­கா­லத்தில் மேலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போவதாகவும் பிரதமரின் விசேட வேலைத்திட்டத்தினூடாக மலையக பகுதியில் 25 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப் பட்டுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்தார்.