செய்திகள்

யாப்பு மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி ஓரு கைப்பொம்மையாக விளங்கமாட்டார்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைநீக்கத்தின் பின்னர் ஜனாதிபதி வெறுமனே கைப்பொம்மையாக விளங்கமாட்டார் என கருத்து தெரிவித்துள்ளார் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண.
அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் இவர் சிலோன் ருடேயின்  நிரஞ்சலா ஆரியவங்கசவுக்கு  அளித்துள்ள பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
கேள்வி: அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பு வரைபில் தேர்தல் சீர்திருத்தங்கள் இடம்பெற்றிருக்கவில்லை அது ஏன்?
பதில்: அரசமைப்பு மாற்றங்களும், தேர்தல் சீர்திருத்தங்களும் 100 நாள் திட்டத்தின் இரு  அம்சங்கள். நிறைவேற்று அதிகார முறை ஓழிப்பு ஆட்சி முறையுடன் நேரடியாக தொடர்புபட்ட விடயம்.தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாகவும் இது காணப்பட்டது.
எனினும் தேர்தல்நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடாபாக இணக்கப்பாட்டிற்கு வருவது அவ்வளவு சுலபமான விடயமல்ல.இரு தேர்தல் முறைகளையும் இணைத்த ஓரு முறை அவசியம் என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளது. எனினும் இதனை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பது குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை.
பிரதான கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் இடையில் இதில் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன.இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டு இரண்டையும் நடைமுறைப்படுத்த முடியுமானால் அது சிறந்த விடயமே.எனினும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படும் என நான் கருதவில்லை.  இதன் காரணமாக நாங்கள் மற்றைய விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை குறித்த விடயத்தில் அரசியல்கட்சிகள் நெகிழ்ச்சிப்போக்கை வெளிப்படுத்தியுள்ளன. எனினும் இது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவின்மை காணப்படுகின்றது.இது பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. அவர்களுடைய கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏனைய உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து தெளிவாக தெரியவில்லை.
சிறிய கட்சிகளுக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஓழிப்பை விட அதிகாரவட்டத்திற்குள் அவர்களுக்கான இடமே முக்கியமாகவுள்ளது.
கேள்வி:  அவர்கள் தமது கட்சிகளின் நிலைப்பாட்டை பின்பற்றவில்லை என்கிறீர்களா?
பதில்: நாங்கள் கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தை சந்தித்துள்ளோம். இவ்வாறான நிலை ஏற்படும் என்பது பொதுவேட்பாளருக்கு இது நன்கு தெரியும் இதன் காரணமாகவே 100 நாள் திட்டத்தின் இரு அம்சங்களாக அவர்இவற்றை சேர்த்துக்கொண்டார்.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஓழிப்பிற்கு முன்னுரிமையளித்தார்.
நாங்கள் யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும். இது புதிய அரசமைப்பிற்கான தருணமல்ல.இதன் காரணமாகவே நாங்கள் படிப்படியாக நகர திட்டமிட்டோம்.  நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படும்போது, மக்கள் ஏனைய விடயங்களையும் முன்னெடுக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுப்பார்கள்.
கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம், தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் ஆகிய இரண்டையும் ஓன்றாக முன்னெடுக்க வேண்டும் என கருதுகின்றதே?
பதில்:  அரசியல் கட்சிகளுக்கு கருத்துகள் இருக்கலாம். எனினும் நாங்கள் முதலில் மக்கள் கருத்து என்னவென்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
1994 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மாற்றப்படும்,புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தது.
சிலர் இரண்டையும் நேர்மையாக செய்வதற்கே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.எனினும் நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படுவதை விரும்பாதவர்கள் இரண்டையும் ஓன்றாக நிறைவேற்றும் யோசனை மூலமாக அரசியலமைப்பு மாற்றத்தை குழப்பலாம்.
மக்கள் இரு அரசமைப்பு மாற்றங்களுக்கே வாக்களித்துள்ளனர். அரசியல் கட்சிகள் அதற்கு தலைவணங்க வேண்டும்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதால் தங்கள் தலைவருடைய திட்டத்திற்கு அவர்கள் ஆதரவளிக்கவேண்டும்.
கேள்வி:  அரசமைப்பு தொடர்பான சட்டத்தரணி என்ற வகையில் அரசமைப்பு மாற்றங்களை முன்னெடுப்பதில் என்ன பிரச்சினைகளை காணகிறீர்கள்?
பதில்: நான் பல பாத்திரங்களை வகிக்கிறேன், இடதுசாரி,அரசமைப்பு சட்டத்தரணி,ஜனாதிபதி ஆலோசகர், என பல
புதிய அரசமைப்பை கொண்டுவருவதே எனது கனவு,விருப்பம், எனினும் நாங்கள் யதார்த்தபூர்வமாக செயற்படவேண்டும்.
பிரதான கட்சிகளிடம் அதிகளவு அதிகாரங்கள் இருக்கவேண்டும்,சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை அவர்கள் நம்பியிருக்க கூடாது என சிலர் கருதுகின்றனர்.நான் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.பிரதான கட்சிகள் தனித்து அரசமைக்ககூடாது என்பதே எனது கருத்து,அவர்கள் சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தவேண்டும்.
இலங்கையில் எந்த பிரதான கட்சிக்கும் 50 வீத அதிகாரமில்லை.இதன் காரணமாக அவர்கள் ஏனையவர்களை செவி;மடுக்கவேண்டும்.அளவுக்கதிகமான அதிகாரங்கள் இருக்கும்போது பிரதான கட்சிகள் சிறுபான்மையினத்தவர்களின் கருத்துக்களை புறக்கணிக்கின்றன.
நானும் ஒரு சிறுபான்மை கட்சியை சேர்ந்தவன் தான். இடதுசாரி என்ற வகையில் எங்களது கருத்தும் பரிசீலிக்கப்படும் அரசாங்கங்களை நான் விரும்புகிறேன்.
இரு பிரதான கட்சிகளும் சிறிய கட்சிகளின் இருப்பை ஏற்றுக்கொண்டாலும் ஆட்சியை அமைக்கும்போது அந்த கட்சிகளின் தயவை எதிர்பார்க்க கூடாது என கருதுகின்றன.
யதார்த்தத்தில் சிறுபான்மை மற்றும் மத கட்சிகள் உள்ளன.சிறுபான்மை கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய தேவையை அகற்றுவதன் மூலமாக சிங்கள பௌத்தத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் சிலர் கருதுகின்றனர்.
இந்த பின்னணியில் என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அனைத்து சமூக குழுக்களினதும்,அரசியல் குழுக்களினதும் அரசியல் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும்.
கேள்வி: நீங்கள் தேர்தல் பிரச்சார காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கத்திற்காக குரல்கொடுத்தீர்கள். தற்போதைய வரைபு குறித்து உங்களுக்கு திருப்தியா?
பதில்: எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.அதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி அமைந்துள்ளது நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையிலும் அது அமைந்துள்ளது.
கேள்வி: அவ்வேளை முழுமையான நீக்கத்திற்காக வாதடினீர்கள்?
பதில்: நிறைவேற்று அதிகார முறை நீக்கம் என்பது ஜனாதிபதி பதவியை இ;ல்லாமல் செய்வதல்ல,அரசமைப்பு நகல் வடிவில் ஜனாதிபதி பதவியும் உள்ளது.அரச தலைவர்  ஓருவர் எங்களுக்கு அவசியம்.1972 அரசமைப்பை பாருங்கள் அரச தலைவர் ஜனாதிபதி,பலர் இதனை மறந்துவிட்டனர்.ஜனாதிபதி வில்லியம்கோபல்லாவ அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஆலோசனைகளின் கீழ் செயற்பட்டார். இந்த அரசமைப்பின் கீழும் ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் காணப்படுவார். எனினும் அமைச்சரவையின் உத்தரவின் கீழேயே அவர் செயற்படுவார்.
கேள்வி:  1972 யாப்பை விட ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதே?
பதில்:ஆம்,இந்தியா போன்று ஜனாதிபதிக்கு தனக்கு வழங்கப்பட்ட உத்தரவை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்கும் அதிகாரமுள்ளது. இது கலந்தாலோசனையை ஆரம்பித்துவைக்கின்றது.எனினும் ஜனாதிபதியும் சில உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் சட்டமூலமொன்று இறுதியாக ஜனாதிபதியாலேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சபாநாயகரால் அல்ல.
பாராளுமன்றத்தின் சட்டமூலத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம.அவர் ஓரு கைப்பொம்மையல்ல,மேலும் அவரிற்கு தேசிய நல்லிணக்கம்,ஐக்கியத்தை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.அது ஒரு நிறைவேற்று அதிகாரமல்ல ஒரு கடமை, நாங்கள் நல்லாட்சியையும் அவரிடம் கையளிக்க தீர்மானித்துள்ளோம்.
கேள்வி: எதிர்கால ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக விளங்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதா?
பதில்: இல்லை,பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.எனினும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை.
கேள்வி:  ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் மோதல் உண்டாக வாய்ப்புள்ளதா?
பதில்: இதற்கான சாத்தியமில்லை.ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடன் செயற்பாடுவார்.பாராளுமன்றத்தை அதன் சட்டமூலங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மாத்திரம் அவரால் கோர முடியும்.
கேள்வி:  புதிய அரசமைப்பின் கீழ் மாகாணசபைகளை கலைப்பதற்கான அதிகாரம் யாரிடமுள்ளது.
பதில்: மாகாணசபை தொடர்பான மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை,மாகாணசபைகள் அரசமைப்பிற்கு எதிராக செயற்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒரளவிற்கு ஜனாதிபதிக்குள்ளது.எனினும் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே அவர் இதனை முன்னெடுக்கலாம்.இந்தியாவிலும் இதுவே நடைமுறை.