செய்திகள்

யாழில் நேற்று கைது செய்யப்பட்ட 129 பேரினையும் மூன்று கட்டமாக விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நேற்றைய தினம் யாழ்.நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமை,சிறைச்சாலை வாகனம்,சட்டத்தரணிகள் வாகனம் என்பன அடித்து நொறுக்கப்பட்டமை,கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியமை,பொலிஸ் கண்காணிப்பகம் மீது தாக்குதல் நடாத்தியமை,கலகம் விளைவித்தவர்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் 129 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.முதற்கட்டமாக ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரினையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும்,அடுத்தகட்டமாக ஆஜர்படுத்தப்பட்ட 39 பேரினை அடுத்தமாதம் 4 ஆம் திகதி வரையும்,மீதமுள்ளோரை 5 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும்,முன்னாள் போராளிகள் சிலரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.இந்தியப் பிரஜையினை மீட்க யாழ்ப்பாணத்திhலுள்ள துணைத்தூரக அதிகாரிகள் நீதிமன்றம் வருகை தந்திருந்தனர்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் பலரும் சம்பவத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவுகளின் நிலைமையினை தெரிந்து கொள்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் நீதிமன்றத்திற்கும்,யாழ்.பொலிஸ் நிலையத்திற்கும் அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகிறது.
யாழ்.நகர் நிருபர்-

1