செய்திகள்

யாழில் மதுபோதையில் தனது 13 வயது மகளை வெட்டிக் காயப்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்

தனது பதின் மூன்று வயது மகளை மதுபோதையில் வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ்.கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

இதே பகுதியைச் சேர்ந்த கே.ஆஷா என்ற 13 வயதுச் சிறுமியே இவ்வாறு வெட்டுக்காயங்களுக்கு இலக்காகித் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை குற்றத் தடுப்புப் பொலிஸார் சந்தேகநபரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். யாழ்.நகர் நிருபர்-