செய்திகள்

யாழில் விவசாயக் கண்காட்சி

காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விவசாயம் சார் திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைத்துள்ள விவசாயக் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் வெள்ளி வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இடம்பெறவுள்ளது.அத்துடன் குறித்த கண்காட்சி நிகழ்வினை தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)