செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணி என்ன? 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

பாடசாலை மாணவி வித்தியாவில் படுகொலைச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவின் படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையும் பிரதேசத்தின் பதற்றநிலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் ஒட்டுமொத்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவும் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

யாழ்ப்பாணம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, நேற்றும் இன்றும், மாவட்டத்தில் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.