செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்கியுள்ளனர்.இவர்களில் அதன்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகள்கள் (வயது 7 மற்றும் 11) மற்றும் 5 ஆண்கள் ஆகியோரே அடையாளம் காணப்பட்டனர்.இவர்களில் 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அரியாலை மதபோதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டநிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.(15)