செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடுமையான முறையில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்று முதல் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் என்பதுடன் பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் படியே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடுமையான முறையில் பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழப்பாணத்தின் பிரதான வீதிகளில் பொதுமக்கள் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டையின் இலக்கத்தின் படியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.(15)