செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் இன்று உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த இருவரது சடலங்களும் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(15)