செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று 44 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912ஆக உயர்வடைந்துள்ளது.(15)