செய்திகள்

யாழ்ப்பாணத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சுகாதார பிரிவினரும் யாழ்ப்பாண பொலிஸாரும் சட்டம் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பிரபல விடுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும் ஓட்டுமடம் பகுதியிலுள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.(15)