செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நேற்று 18 சிறுவர்கள் உட்பட 108 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 502 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.இதில், சாவகச்சேரியில் 5 பேரும், சங்கானையில் 25 பேரும், உடுவிலில் 12 பேரும், யாழ். மாநகரில் 13 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். மானிப்பாய் பிரதேச வைத்திய சாலையில் 3 பேரும், அளவெட்டி, பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைகளில் தலா ஒருவரும், பருத்தித்துறை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 27 பேரும்,முல்லைத்தீவு மாவட்டத் தில் 2 சிறுவர்கள் 7 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 233 பேரின் பி. சி. ஆர். மாதிரிகள் சோத னைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 8 சிறுவர்கள் உட்பட 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டனர்.யாழ்ப்பாண மாநகரில் 4 சிறுவர்கள் உட்பட 9 பேரும், தெல்லிப்பழையில் இரு சிறுவர்கள் உட்பட 28 பேரும், நல்லூரில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரும்,சாவகச்சேரியில் 15 வயது சிறுமி ஒருவருமாக 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.இந்நிலையில் வடக்கில் நேற்று 25 சிறுவர்கள் உட்பட 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில், 18 சிறுவர்கள் உட்பட 108 பேர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(15)