செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு 9 மணி வரையான 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் நேற்று இரவு 9 மணி வரையான 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆணும் புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணும் பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆணும் கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.(15)