செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று

யாழ்ப்பாணத்தில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை 6 வயதான சிறுவன் மற்றும் 8, 10 வயதான சிறுமிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான குழந்தை, சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயதும் 6 மாதங்களுமான பெண் குழந்தை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயதும் 8 மாதங்களுமான ஆண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(15)