செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்து 255ஆக அதிகரித்துள்ளது.மேலும், 11 ஆயிரத்து 877 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்தவகையில் தற்போது 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒன்றுகூடல்கள், தேவையற்ற பயணங்கள் ஆகியவற்றை தவிர்க்கும்படி, மீண்டும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.இதேவேளை, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)