செய்திகள்

யாழ்ப்பாணத்துக்கு நாமல் ராஜபக்‌ஷ விஜயம்: அங்கஜன் தலைமையில் பிரச்சாரம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு நான்கு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் கு ஆதரவான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் மகனும் நீலப் படையணியின் தலைவருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் பெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.ப்பாணம் உட்பட பல பகுதிகளிலும் நாமல் ராஜபக்‌ஷ கலந்துகொண்ட பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நீல நிற ரீ சேர்ட்டுக்களுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

03