செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள பாடசாலையொன்றில் மாணவன் மீது அதிபர் கடுமையான தாக்குதல்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிபரினால் கூறப்பட்ட வேலையை குறித்த மாணவன் செய்யாத காரணத்தினாலேயே, அதிபர் இவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)