செய்திகள்

யாழ்ப்பாணம் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கு தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் இமான் கௌரவம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கு தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவமளித்துள்ளார்.பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு யாழ்ப்பாண இசைக் கலைஞரான குமரன் இசை வழங்கியுள்ளார்.இந்நிலையில் யாழ்ப்பாண இசைக்கலைஞருக்கு தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவமளித்துள்ளார்.இதேவேளை குறித்த படத்தில் உள்ள பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக டி.இமான் அவரை அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)