செய்திகள்

யாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேரந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேரந்த பெண்ணொருவர் (65 வயது) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயிக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வைரஸ் தொற்று காரணமாக இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் உயிரிழந்தவரின் உடலை, சுகாதார நடைமுறைகளுடன் முள்ளேரியாவில் மின்தகனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)