செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேருக்கு நேற்று கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேருக்கும் முல்லைத்தீவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இருவருக்கும் வவுனியாவில் ஒன்பது பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 40 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 48 பேருக்குக் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதில், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதியில் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய 24 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பை வைத்திருந்த நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றுக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய இருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதுடன் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.(15)