செய்திகள்

யாழ்ப்பாணம் முழுமையாக முடங்கியது – நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை அடுத்து அரசாங்கம் நேற்று இரவு 11 மணியிலிருந்து எதிர்வரும் திங்கள் கிழமை வரை முழுமையான பயணத் தடையினை அறிவித்திருந்தது.இந்நிலையில் யாழ்ப்பாணமும் முழுமையாக முடங்கியுள்ளது.இதேவேளை, தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுகாதார பிரிவும், பாதுகாப்பு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 39 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 58 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.(15)