செய்திகள்

யாழ். இந்தியத் தூதரக தூதுவராக நட்ராஜ் பொறுப்பெற்றார்

natrajயாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நேற்று திங்கட்கிழமை முதல் ஏ.நட்ராஜன் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவராகக் கடமையாற்றிய வெ.மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இதுவரை காலமும் கண்டியில் உள்ள துணைத் தூதரகத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றிய நட்ராஜ் யாழ். துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரே தற்போது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து இதுவரை காலமும் எஸ்.டி.மூர்த்தி பதில் துணைத்தூதுவராக பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.