செய்திகள்

யாழ்.இலுப்பையடிச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சகோதரனும் சகோதரியும் காயம்

யாழ்.இலுப்பையடிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்-வடி விபத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த சகோதரனும் சகோதரியும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் தனது சகோதரியை சகோதரன் பாடசாலைக்கு மோட்டார்ச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது நாவலர் வீதியால் வந்த வடிரக வாகனம் குறித்த சகோதரர்கள் இருவரும் பயணித்த மோட்டார்ச் சைக்கிளை பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் மோதித் தள்ளியது.சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குப்பிளான் கேணியடியைச் சேர்ந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியரான குணரத்தினம் கஜானன் மற்றும் வேம்படி மகளிர் கல்லூரியில் தரம்-9 இல் கல்வி கற்கும் இராஜேஸ்வரி குணரத்தினம் ஆகியோரே காயமடைந்தவராவார்.

குறித்த விபத்துச் சம்பவத்துக்கு வடிரக வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியின் கவனயீனமே காரணமெனத் தெரிய வருகிறது.  யாழ்.நகர் நிருபர்-