செய்திகள்

யாழ்.ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலாவாணேசுரர் ஆலய முத்தேர்பவனி

யாழ்.ஏழாலை மேற்கு புங்கடி சொர்ணாம்பிகை உடனுறை சமேத அம்பலவாணேசுரர் தேவஸ்தான முத்தேர் பவனி 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

காலை 8.15 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு விக்கினேஸ்வரப் பெருமான்,சொர்ணாம்பிகா உடனுறை அம்பலவாணேசுரர்,வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் சித்திரத் தேரில் ஆரோகணம் செய்யும் திருக்காட்சி இடம்பெற்றது.

பிரதான சித்திரத் தேரை ஆண் அடியவர்கள் ஒரு புறமும்,பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுத்தனர். முற்பகல் 11 மணியளவில் முத்தேர்களும் இருப்பிடத்தை அடைந்தன.அதனைத் தொடர்ந்து அடியார்களின் அர்ச்சனை இடம்பெற்றதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பச்சைசாத்துதல் இடம்பெற்று முத்தேரிலிருந்தும் சுவாமிகள் அவரோகணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA