செய்திகள்

யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் கடலுணவுகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன.கடந்த சில வாரங்களாகக் கடலுணவுகள் அதிகளவில் சந்தைக்கு வந்ததால் அவற்றின் விலைகள் குறைந்து காணப்பட்டன. ஆனால் தற்போது விலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்படி ஒரு கிலோ சுறா 800 ரூபா,ஒரு கிலோ இறால் 700 ரூபா, கணவாய் 600 ரூபா, ஒரு கிலோ மீன்-400 ரூபா, ஒரு கிலோ நண்டு 350 ரூபா ஆகிய விலைகளில் குடாநாட்டில் கடலுணவுகள் தற்போது விற்பனையாகின்றன.

யாழ்.நகரை அண்டிய சின்னக்கடை, கொட்டடி, பாஷையூர், நாவாந்துறை ஆகிய மீன் சந்தைகளில் தற்போது மீன்களின் வரத்துக் குறைந்து காணப்படுவதால் கடலுணவுகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் நிருபர்-