செய்திகள்

யாழ் சம்பவத்தை பயன்படுத்தி இனவாத அரசியல் செய்ய வேண்டாம் : மஹிந்தவுக்கு விஜேதாச கோரிக்கை

புங்குடுதீவில் மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்நது இடம்பெறும் சம்பவங்களை இனவாத பார்வையில் பார்த்து அரசியல் நடத்த வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேட்டுக்கொள்வதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத் வடக்கில் தலைதூக்கியுள்ளதாக பொய்யான கருத்துக்களை கூறி இனவாத அரசியல் நடத்த வேண்டாமெனவும் அவரிடம் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே விஜேதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாணவியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற யாழ்பாணத்தில் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மஹிந்த வரலாற்றில் இப்படித்தான் நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தி புலிகள் உருவானார்கள் அந்த நிலைமை மீண்டும் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.