செய்திகள்

யாழ்.சுன்னாகம் இளைஞர் கழகத்தால் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

யாழ்ப்பாணம் – சுன்னாகம் இளைஞர் கழகத்தின் “இளைஞர் இதயமும் சமுதாய உதயமும்”எனும் செயற்திட்டத்தின் கீழ் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி ஆர்.தவரஞ்சனி, ஆசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ‘இளைஞர் இதயமும் சமுதாய உதயமும்’ செயற்திட்டத்தின் கீழ் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் நகர் நிரூபர்-

16906_842789579102025_7564408341854434368_n-1-600x450

11045299_842789599102023_6438727108645041300_n-1-1-600x450