செய்திகள்

யாழ். நகரில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிச் சென்ற பொலிஸார்!

யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் நகர் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-(3)