செய்திகள்

யாழ். நீதிமன்றத்தின் சேதமடைந்த பகுதிகள் படையினரால் புனரமைப்பு

யாழ். நீதிமன்றத்தின் மீது வன்முறை கும்பல் மேற் கொண்ட தாக்குதல் சம்பவத்தில் சேதமடைந்த பகுதிகளை படையினரின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 20ம் திகதி யாழ். நீதிமன்ற சுற்றாடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட் டத்தின்போது வன்முறை கும்பல் ஒன்று நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி நீதிமன்றத்தையும் பொது சொத்துக்களையும் சேதப் படுத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதம நீதியரசர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வந்து பார்வை யிட்டு சென்றிருந்த
நிலையில் சனிக்கிழமை மாலை தொடக்கம் படையினர் நீதிமன்றத்தின் சேதமடைந்த பகுதிகளை முழுமையாக அகற்றி திருத்தியமைத்துக்கொண்டி ருந்தனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் வாகனம் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.