செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(15)